Advertisement

மும்பை அணி வெற்றி

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி 31-25 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். நேற்று நடந்த முதல் போட்டியில் ஐதராபாத் அணி, மும்பையை சந்தித்தது.

துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி முதல் பாதியில் 18-10 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஐதராபாத் சோகம் தொடர, மும்பை வீரர் அபிஷேக் சிங் (10) புள்ளிகளை குவித்தார். முடிவில் மும்பை அணி 31-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் பாட்னா அணி, 32-34 என பெங்களூரு அணியிடம் வீழ்ந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement