Advertisement

சாதிக்குமா தமிழ் தலைவாஸ் * ஏழாவது சீசனில் எதிர்பார்ப்பு

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் முதல் போட்டியை தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் துவக்கும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் 'ரவுண்டு ராபின்' முறையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். இன்று நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ், வலிமையான ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

2017ல் முதன் முதலில் கால் பதித்த தமிழ் தலைவாஸ், 22 போட்டியில் 6 வெற்றி மட்டும் பெற, 'பி' மண்டலத்தில் கடைசி இடம் பிடித்தது. 2018ல் முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்பட்டது. மாறாக கடைசி இடம் பிடித்தது.

இருப்பினும் கேப்டனாக அஜய் தாகூர் தொடர்கிறார். மன்ஜீத் சில்லார் தக்கவைக்கப்பட்டார். கடந்த ஆறு சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ராகுல் சவுத்ரி, ரூ, 94 லட்சத்துக்கு வாங்கப்பட்டது தமிழ் தலைவாஸ் அணிக்கு நம்பிக்கை தரலாம்.

சிறந்த 'ரெய்டரான' இவர், அதிக புள்ளிகள் (876) பெற்றவர்களில் 'நம்பர்-1' ஆக உள்ளார். ரான் சிங், மோகித் சில்லாரும் பலம் சேர்க்க காத்திருக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement