Advertisement

களமிறங்குகிறார் 'கர்னல்' தோனி

மும்பை: இந்திய அணி வீரர் தோனி, அடுத்த இரண்டு மாதம் துணை ராணுவப்படையில் சேர்ந்து சேவை செய்ய உள்ளார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் தோனி 38. 'டுவென்டி-20' (2007), ஒருநாள் (2011) என இரண்டு உலக கோப்பை வென்று தந்தவர். 2014 கடைசியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், ஆஸ்திரேலியா, விண்டீஸ் 'டுவென்டி-20' தொடரில் சேர்க்கப்படவில்லை.

ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற தோனியின் பேட்டிங், 'பினிஷிங்' திறன், சமீபகாலமாக குறைந்து விட்டது என விமர்சிக்கப்பட, இங்கிலாந்து, உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பல்வேறு செய்திகள் வெளியான போதும் தோனி மவுனம் காத்தார். விண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் பெறுவாரா என சந்தேகமாக இருந்தது. ஆனால் 'தோனி தற்போதைக்கு ஓய்வு முடிவில் இல்லை' என இவரது நண்பர் அருண் பாண்டே தெரிவித்தார்.

மாறாக அடுத்த இரு மாதம், துணை ராணுவப்படையில் இணைந்து சேவை செய்ய உள்ளார். இதை இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளார்.

'கர்னல்' தோனி

கடந்த 2011ல், உலக கோப்பை வென்ற பிறகு, இந்திய துணை ராணுவப்படையின் பாராசூட் பிரிவில் கவுரவ 'லெப்டினென்ட் கர்னல்' ஆனார் தோனி. எல்லைப் பகுதிகளுக்கு சென்று வீரர்களை சந்தித்தார். 2015ல் பாராசூட்டில் இருந்து குதிப்பது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றார்.

தற்போது மீண்டும் ராணுவத்துக்கு செல்கிறார். பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''தோனி இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி, அடுத்த இரு மாதம் துணை ராணுவத்தில் இணைந்து சேவை செய்வார். இதை கேப்டன் கோஹ்லி, தேர்வுக்குழு தலைவர் பிரசாத்திடம் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.



செப்., மாதம் ஓய்வு

விண்டீஸ் தொடருக்குப் பின் இந்திய அணி, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக மூன்று 'டுவென்டி-20' (செப். 15, 18, 22), மூன்று டெஸ்ட் (அக். 2-6, அக். 10-14, அக். 19-23) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் தோனி பங்கேற்று, பின் ஓய்வு பெறலாம் எனத் தெரிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement