Advertisement

இந்திய அணிக்கு தங்கம்

புதுடில்லி: ஆசிய விளையாட்டு கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் இந்திய அணியின் வெள்ளிப் பதக்கம்

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் 2018ல் ஆசிய விளையாட்டு நடந்தது. இதன் கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜிவ், பூவம்மா, ஹிமா தாஸ் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய துாரத்தை இரண்டாவது அணியாக கடந்த இவர்கள், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். முதலிடம் பிடித்த பக்ரைன் அணி தங்கத்தை தட்டிச்சென்றது. இதற்கிடையே, இப்போட்டியில் பங்கேற்ற பக்ரைன் வீராங்கனை கெமி அட்கோயா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.

இவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க, சர்வதேச தடகள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தடை விதித்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்திற்குப்பின், கெமி போட்டியில் வென்ற பட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்த காலகட்டத்தில்தான் ஆசிய விளையாட்டு நடந்தது. இதனால், இவர் அடங்கிய பக்ரைன் அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement