Advertisement

வழிவிடுவாரா...வழிகாட்டுவாரா: தவிக்கும் தோனி

புதுடில்லி: இந்திய அணியின் 'சீனியர்' தோனி இக்கட்டான நிலையில் உள்ளார். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவாரா அல்லது வழிகாட்டியாக அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கேப்டனாக வலம் வந்தவர் தோனி, 38. இரண்டு உலக கோப்பையை (2007- 'டுவென்டி-20', 2011- ஒரு நாள்) வென்று காட்டினார். இவரின் 'பினிஷிங்' திறன், 'கூலாக' செயல்படுவது ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. திடீரென 2014ல் டெஸ்டிலிருந்து விடை பெற்றார்.

கடந்த 2015ல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த உலக கோப்பையில் (8 போட்டி, 237 ரன்) ஜொலிக்கவில்லை. பின், சொந்த மண்ணில் நடந்த 'டுவென்டி-20' உலக கோப்பையில் இவரது தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் வீழ்ந்தது. சமீபத்திய உலக கோப்பையில் இந்திய அணி, அரையிறுதியுடன் திரும்பியது. தோனியும் (9 போட்டி, 273 ரன்) சோபிக்காத காரணத்தால், மீண்டும் ஓய்வு குறித்து பேச்சு எழுந்துவிட்டது.

சென்னை ஐ.பி.எல்., அணிக்கு மூன்று கோப்பை வென்று தந்தாலும், இந்திய அணிக்கு ஏமாற்றுகிறார தோனி. சென்னை அணிக்காக 166 இன்னிங்சில் 4307 ரன்கள் (22 அரை சதம்) குவித்துள்ளார். சராசரி 42.22 ஆக உள்ளது. இந்திய அணிக்கு 85 இன்னிங்சில் 1617 (2 அரை சதம்) ரன்தான் எடுத்துள்ளார். சராசரியும் 37.6 மட்டும்தான்.

மோசமான செயல்பாடு

ஒரு நாள் போட்டியிலும் தடுமாற்றம் தெரிகிறது. 2016ல் 10 இன்னிங்சில் 278 ரன்கள் மட்டும் எடுத்தார். 2018ல் (13 இன்னிங்ஸ், 275 ரன்) இன்னும் சறுக்கினார். ஒரு நாள் அரங்கில் இவரது 'ஸ்டிரைக் ரேட்' 2016ல் 80.11 ஆக இருந்தது. 2017ல் 84.73 ஆக மாறியது. அடுத்த ஆண்டில் 71.42 ஆக குறைந்தது. கடந்த 2017க்குப்பின் ஒரு நாள் அரங்கில் இவர் சந்தித்த மொத்த பந்துகளில் 50.78 சதவீதம் 'டாட் பாலாக' (ரன் எடுக்கவில்லை) உள்ளது. 2017க்குப்பின் கடைசி கட்ட ஓவர்களில், தோனி பவுண்டரி அடிக்கும் சதவீதம் 48.23 மட்டுமே. பேட்டிங், கீப்பிங் திறன் குறைந்து வருவதால் தோனி விரைவில் ஓய்வு பெறுவது நல்லது என்று கூறப்படுகிறது.

அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் துவங்கவுள்ள 3 'டுவென்டி-20', 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். இவரது இடத்திற்கு இளம் கீப்பர் ரிஷாப்பை களமிறக்க முடிவு செய்துள்ளனர். கரீபிய தொடருக்கான அணியில் இடம் பெறாவிட்டாலும், கோஹ்லிக்கு வழிகாட்டியது போல ரிஷாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் எண்ணத்தில் உள்ளார்.

வாய்ப்பு 'நோ'

பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' சொந்த மண் அல்லது அன்னிய மண் எதுவானாலும், முதல் கீப்பராக தோனி செல்வதற்கு வாய்ப்பு இல்லை. இவருக்குப்பதில் ரிஷாப் அணியில் இடம்பிடிப்பார். ஒருவேளை, விண்டீஸ் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்தாலும், 'லெவன்' அணியில் வாய்ப்பு கிடைக்காது. ரிஷாப்பிற்கு தற்போது 22 வயதாகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பைக்கு (அக்.18, நவ. 15) இன்னும் ஒரு ஆண்டு இடைவெளி உள்ளது. இந்த காலகட்டத்தில் ரிஷாப் 'செட்' ஆகி விடுவார்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ajoe - Coimbatore,இந்தியா


    see Dhoni is one of the best cricketer in the world. There are some people who are saying that dhoni is playing slow cricket, But it is not correct , he is playing sensible and situational cricket . He is the best finisher and people who are saying or teasing Dhoni , The truth is that they does not know anything about Cricket.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement