Advertisement

வேண்டாம் நாலு ரன்: வலியுறுத்திய ஸ்டோக்ஸ்

லண்டன்: லார்ட்சில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது. பின், 'சேஸ்' செய்த இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் அரை சதம் விளாசி கைகொடுத்தார். முக்கியமான கட்டத்தில், நியூசிலாந்தின் கப்டில் ஓவர் 'த்ரோ' செய்த பந்து, ரன் எடுக்க ஓடிய ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதனையடுத்து, அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்துக்கு 6 ரன்கள் (2 ரன்+ பவுண்டரி) கிடைத்தது. உண்மையில் ௫ ரன் தான் கொடுத்திருக்க வேண்டும். இது நிகழாமல் இருந்திருந்தால், போட்டியில் நியூசிலாந்து வென்றிருக்கும். பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து கோப்பை வென்ற நிலை மாறி இருக்கும்.

ஆண்டர்சன் தகவல்

இது குறித்து ஸ்டோக்சின் சக டெஸ்ட் பவுலர் ஆண்டர்சன் கூறுகையில்,'' கிரிக்கெட் விதிப்படி, 'ஓவர் த்ரோ' செய்த பந்து, எல்லையை தொட்டுவிட்டால், நிச்சயமாக நான்கு ரன்கள் தரப்படும். இதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், 'பைனல் போட்டியின் போது, நீங்கள் அளித்த நான்கு ரன்களை திரும்பப்பெற முடியுமா, இது எங்கள் அணிக்கு வேண்டாம்' என அம்பயரிடம் ஸ்டோக்ஸ் கேட்டுள்ளார். விதிப்படி ஒரு முறை தந்துவிட்டால் மீண்டும் திரும்ப பெற சாத்தியம் இல்லை. ஸ்டோக்ஸ் கேட்ட சம்பவத்தை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் என்னிடம் தெரிவித்தார்,'' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement