Advertisement

வெள்ளி வென்றார் தீபிகா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை சோதனை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி வென்றார்.

அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் (ஜூலை 24-ஆக. 9) ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. தற்போது, இதற்கான வில்வித்தை சோதனை போட்டிகள் நடக்கின்றன. இதன் பெண்கள் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி பங்கேற்றார். இதன் காலிறுதியில் இத்தாலியின் டாடியானாவை வீழ்த்திய தீபிகா, அரையிறுதியில் சீனாவின் ஜெங்கை தோற்கடித்தார். பைனலில் தென் கொரியாவின் ஆன் சாமை எதிர் கொண்டார். இதில் போராடிய தீபிகா 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

பம்பய்லா தோல்வி

இதே பிரிவின் முதல் சுற்றில், மற்றொரு இந்திய வீராங்கனை பம்பய்லா தேவி 5-6 என மலேசியாவின் நுார் அலியிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அடானு தாஸ் 4-6 என தென் கொரியாவின் பெய் ஜாயினடம் வீழ்ந்தார்.

சக இந்திய வீரர்களான தருண்தீப் ராய், பிரவீண் முதல் சுற்றில் வெளியேறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement