Advertisement

ஆறாவது அணி இங்கிலாந்து

லண்டன்: உலக கோப்பை வென்ற 6வது அணி என்ற பெருமை பெற்றது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணி, முதன்முறையாக உலக கோப்பை வென்றது. இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 6வது அணியானது. ஏற்கனவே ஆஸ்திரேலியா (1987, 1999, 2003, 2007, 2015), இந்தியா (1983, 2011), வெஸ்ட் இண்டீஸ் (1975, 1979), பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) அணிகள் உலக கோப்பை வென்றிருந்தன.

இரண்டாவது அணி

லீக் சுற்றில் 3 தோல்வியை சந்தித்து உலக கோப்பை வென்ற 2வது அணியானது இங்கிலாந்து. ஏற்கனவே 1992ல் பாகிஸ்தான் அணி, 3 லீக் போட்டியில் தோல்வியடைந்து, பைனலில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.

முதன்முறை

உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக பைனல் 'டை' ஆனது.

* இது, உலக கோப்பை அரங்கில் 'டை' ஆன, 5வது போட்டி. ஏற்கனவே ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா (1999, இடம்: பர்மிங்காம்), தென் ஆப்ரிக்கா-இலங்கை (2003, இடம்: டர்பன்), அயர்லாந்து-ஜிம்பாப்வே (2007, இடம்: ஜமைக்கா), இந்தியா-இங்கிலாந்து (2011, இடம்: பெங்களூரு) அணிகள் மோதிய போட்டிகள் 'டை' ஆனது.

* இப்போட்டி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், 'டை' ஆன, 3வது பைனல். ஏற்கனவே ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் (உலக சீரிஸ் கோப்பை, 1984, இடம்:மெல்போர்ன்), இங்கிலாந்து-ஆஸ்திரேலியா (நாட்வெஸ்ட் சீரிஸ், 2005, இடம்: லார்ட்ஸ்) அணிகள் மோதிய பைனல் 'டை' ஆனது.

மூன்றாவது அணி

இங்கிலாந்திடம் வீழ்ந்த நியூசிலாந்து, உலக கோப்பை பைனலில் தொடர்ச்சியாக 2 முறை தோல்வியடைந்த 3வது அணியானது. இதற்கு முன், 2015ல் நடந்த பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஏற்கனவே இங்கிலாந்து (1987, 1992), இலங்கை (2007, 2011) அணிகள் தொடர்ச்சியாக 2 பைனலில் வீழ்ந்தன.

அடுத்து இந்தியா

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இனி, 13வது சீசன் வரும் 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ளது. முதன்முறையாக இந்தியா, தனித்து உலக கோப்பை தொடரை நடத்துகிறது. பைனல், மும்பையில் நடக்கவுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement