Advertisement

வில்லியம்சன் '578'

லண்டன்: நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

நியூசிலாந்தின் வில்லியம்சன், இம்முறை விளையாடிய 10 போட்டியில், 2 சதம், 2 அரைசதம் உட்பட 578 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2007ல் நடந்த உலக கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த மகிளா ஜெயவர்தனா, 548 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட வில்லியம்சன், தொடர் நாயகன் விருது வென்றார்.

கப்டில் ஏமாற்றம்

கடந்த 2015ல் நடந்த உலக கோப்பையில் விளையாடிய 9 போட்டியில், 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 547 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் மார்டின் கப்டில், அதிக ரன் எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆனால் இம்முறை 'பேட்டிங்கில்' சொதப்பிய இவர், 10 போட்டியில், ஒரு அரைசதம் உட்பட 186 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த முறை இவர், ஒரு இன்னிங்சில் 237 ரன்கள் குவித்தார்.

ஆர்ச்சர் '20'

வேகப்பந்துவீச்சில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர், 11 போட்டியில், 20 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு உலக கோப்பை சீசனில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அடுத்த நான்கு இடங்களில் முறையே மார்க் உட் (18 விக்கெட், 2019), வோக்ஸ் (16 விக்கெட், 2019), இயான் போத்தம் (16 விக்கெட், 1992), ஆன்ட்ரூ பிளிண்டாப் (14 விக்கெட், 2007) ஆகியோர் உள்ளனர்.





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement