Advertisement

என்ன தவறு செய்தார் கோஹ்லி * முன்னாள் வீரர்கள் விளாசல்

மான்செஸ்டர்: 'நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோனியை முன்னதாக களமிறக்கி இருக்க வேண்டும்,' என கங்குலி, சச்சின், லட்சுமண் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ரிஷாப் பன்ட், பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என களமிறங்கினர். தோனி 7வது வீரராக வந்தார். இவருக்கு கைகொடுக்க பின் வரிசையில் ஜடேஜா மட்டும் தான் இருந்தார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:

இந்திய அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த போது, இதை தடுத்து நிறுத்த அனுபவ வீரர் தேவைப்பட்டார். ஒருவேளை தோனி களத்தில் இருந்திருந்தால், இளம் வீரர்களுக்கு 'அட்வைஸ்' செய்திருப்பார்.

ரிஷாப் பன்ட் மோசமான 'ஷாட்' ஆட அனுமதித்து இருக்க மாட்டார். கொத்து கொத்தாக விக்கெட்டுகள் வீழ்வதை தடுத்து நிறுத்தி இருப்பார். சிறந்த 'பினிஷரான' தோனி மீது மிகுந்த மரியாதை உள்ளது. போட்டியை கடைசி வரை கொண்டு செல்கிறார். சிக்சர் அடிக்கவில்லை என்பது பொருட்டல்ல. ஆனால் ஒருநாள் போட்டியில் இப்படி விளையாடித் தான் வெற்றி பெற வேண்டும் என அவர் நினைத்திருப்பார்.

பலவீனமான 'மிடில்'

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 'மிடில் ஆர்டரை' பலப்படுத்தாமல் இந்திய தேர்வாளர்கள் பெரிய தவறு செய்து விட்டனர். எதிர்காலத்தில் ரிஷாப் பன்ட்டை ஐந்தாவது இடத்தில் களமிறக்க வேண்டும். ஷிகர் தவான் அணிக்கு திரும்பும் பட்சத்தில் ராகுல், கோஹ்லி, 3, 4வது இடத்தில் களமிறங்கலாம். 'மிடில் ஆர்டருக்கு' சரியான வீரர்களை கண்டு பிடித்து, தொடர்ந்து வாய்ப்பு தந்து, தயார் செய்ய வேண்டும். போட்டியை வென்று தர ஜடேஜாவை சார்ந்திருக்க கூடாது.

இவ்வாறு கங்குலி கூறினார்.

லட்சுமண் கூறியது:

எப்போதும் ரோகித், கோஹ்லியை நம்பிருக்க முடியாது. அரையிறுதியில் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னதாக தோனியை களமிறக்கி இருக்க வேண்டும். இந்திய அணியின் திட்டமிடுதலில் ஏற்பட்ட பெரிய தவறு இது. 2011 உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். பைனலில் இவரை பின்னுக்கு தள்ளிய கேப்டன் தோனி, பேட்டிங் ஆர்டரில் நான்காவது இடத்தில் களமிறங்க முடிவு செய்தார். உலக கோப்பையும் வென்று தந்தார்.சச்சின் கூறுகையில்,'' நெருக்கடியான நேரத்தில் பாண்ட்யாவுக்கு முன்னதாக அனுபவ வீரர் தோனியை களமிறக்கி இருக்க வேண்டும். ஜடேஜாவுடன் தொடர்ந்து பேசி சிறப்பாக விளையாடச் செய்தார். தினேஷ் கார்த்திக் 5வது இடத்தில் களமிறக்கியது தவறு,'' என்றார்.இதுவும் காரணம் தான்

மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் காணப்பட்டது. பந்துகள் நன்றாக சுவிங் ஆகும். இதற்கேற்ப இந்திய 'டாப் ஆர்டர்' வீரர்கள் கவனமாக செயல்பட்டு இருக்க வேண்டும்.

* லீக் சுற்றில் ரோகித் சர்மாவுக்கு 4 கேட்ச் கோட்டை விடப்பட்டன. இதில் 3 முறை சதம், ஒரு முறை அரைசதம் அடித்தார். பீல்டிங்கில் தவறு செய்யாத நியூசிலாந்து, ரோகித்தை துவக்கத்திலேயே 'கேட்ச்' செய்தது. தோனியை ரன் அவுட் செய்தனர்.

* ரிஷாப் பன்ட், பாண்ட்யா இருவரும் வீணான 'ஷாட்' விளையாடினர்.

* தோனி, ஜடேஜா இணைந்து அணியை மீட்டாலும், அதிக தாமதம் ஆகி விட்டது. கடைசி 3 ஓவரில் 37 ரன் என்பது பெரும் சிக்கலை தந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Suresh Rathinaswamy - Chennai,இந்தியா


  டோனி ஒரு அருமையான கிரிக்கெட்டர். ஏன் எல்லோரும் அவரை கேளனமாக பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவரைப்போல மற்றும் கபில்தேவை போல நபர்கள் யாருடைய பேச்சுக்கும் அடிபணிய மாட்டார்கள். இதன்மூலம் ஒன்றை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன். இன்னும் ஒரு சில தினங்களில் யார் யார் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை வைத்து கண்டிப்பாக டோனி ஓய்வு முடிவை அறிவிப்பார்.அப்போது தான் இங்கு கேவலமாக பேசும் அனைத்து தரப்பினரும் வாயை மூடி கொண்டு அவர்களுடைய வேலையை பார்க்க ஆரம்பிப்பார்கள். இனிமேல் கடவுளே வந்து டோனியை விளையாட சொன்னாலும் அவர் கிரிக்கெட் விளையாட வரப்போவது இல்லை. அவர் எப்போவா சொல்லிவிட்டார். (அவர் ஓவியராக விரும்பி அடுத்து கட்ட வேலைகளை விரைவில் ஆரம்பிப்பார்) நீங்கள் கொடுக்கும் மரியாதையை ஏற்க போவதும் இல்லை. உங்களுடைய புகழும் அவருக்கு இப்போது தேவையில்லை. ஏனேனில் அவர் உலகம் புகழும் அளவுக்கு மரியாதையை ஏற்கனேவே பெற்றுவிட்டார். இனிமேல் அவருடைய இழப்பு இந்திய கிரிக்கெட் அணியினருக்கு எவ்வளவு பெரியது என்பதை தெரிந்து கொள்ளும் காலம் வரும்.

 • Pandian - madurai,இந்தியா


  யாரோ இரு வீரர்களை தண்டிப்பது சரியல்ல. ஆரம்பத்தில் விளையாடாத ராகுலை வெளியேற்றுங்கள். அரையிறுதி என்ன ஜிம்பாப்வே தொடரா? அடுத்து பார்ப்பதற்கு. சச்சின் பலகாலம் கஷ்டப்பட்டு டோனி துணையுடன் உலகக்கோப்பை பெற முடிந்தது. இப்போது டோனி, தயவுடன் கோஹ்லி வாங்க இருந்த பெரும் வாய்ப்பு நழுவியது. சகல் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஜாதவ் இறக்கி இருந்தால் கூட இன்னொரு பாட்ஸ்மன் கிடைத்திருப்பார். பிற நாடுகள் ஆறு வேக, மிதவேக பந்துவீச்சாளர்களுடன் இறங்கியது கண்ணுக்கு தெரியலையா? ஸ்பின் சாண்ட்னெர் ஆறு ஓவர்கள் வரை கொடுத்த ரன்கள் தெரியுமா? கட்டுப்பாடுகள் நிறைந்த ஓவர்களில் விக்கெட் விழுந்தால் டிராவிட் போன்ற ஒருவரை அனுப்ப வேண்டும். பந்த் அடித்த மோசமான ஷாட்டுக்கு பல ஆண்டுகள் கழிந்தாலும் கோப்பை கணவாவது காண முடியுமா? பொறுமையாக ஆட சொன்ன பாண்டியா அதே போல் வெளியேறலாமா? பௌலிங் பிட்சில் 30 ரன் எடுக்காதவர் ஒரு வீரர் என கூற முடியாது. பௌலர்கள் தவிர. போய் ஐபில் விளையாடுங்கள்.

 • sridhar - kampala,உகான்டா


  மழை காரணமாக ஆடுகளம் மாறிவிட்டது என்பது உண்மைதான் என்றாலும் நமது வீரர்கள் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும் என்று தெரிந்தும் அதற்கேற்றாற்போல் ஆடமுடியாமல் போனது. நமது அணி மட்டும் அல்ல ஆஸ்திரேலியா அணியும் திணறியதை நம்மால் காண முடிந்தது இதே பிட்சில் இங்கிலாந்து அணி எப்படி ஆடியது என்பதையும் நம்மால் பார்க்க முடிந்தது முக்கிய காரணம் இதே மாதிரி பிட்ச் நமது இந்தியாவில் இல்லாத காரணம் தான் அவர்களுக்கு இது பழக்கமான பிட்ச் என்பதால் மிக நன்றாக விளையாடினார்கள் என்பதையும் ஒற்றுக்கொள்ளவேண்டும்

 • jo - puducherry,இந்தியா


  சச்சின்,கங்குலி இவர்கள் கேப்டனாக இருக்கும் போது உலகக்கோப்பை வாங்கி தந்த மாதிரியே பேச வேண்டியது

 • govindarajan - Ahmadabad,இந்தியா


  எல்லோரும் எப்படியும் சொல்லட்டும். இது ஒரு நாள் போட்டி. இரு அணிகளும் ஒரே நாளில் விளையாடினால் தான் அதில் பொருள் இருக்கும். நேற்று விளையாடியதற்கு இன்று பதில் கொடுக்கும் போது வீரர்களின் மனநிலை பல விதமாக இருக்கும். இது முதலே அப்படித்தான் என்றாலும் வேறு முறையில் விளையாடி இருப்பார்கள். ஆடுகளமும் நேற்றைக்கு இருந்தது போல இல்லை. அதனால் இயற்கையின் சதியும் இதில் உள்ளது. இப்போது நடந்த விளையாட்டு முறையாலும் இந்திய வீரர்களின் மன நிலை அதில் ஈடுபடாமல் தோல்வியை தழுவி இருக்கலாம் என்பது என் கருத்து.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement