Advertisement

இக்கட்டான நிலையில் தென் ஆப்ரிக்கா * நியூசி.,யிடம் பலப்பரீட்சை

பர்மிங்காம்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை தொடரில் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கியது தென் ஆப்ரிக்கா. முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியாவிடம் தோற்றது. அடுத்து விண்டீஸ் போட்டி மழையால் ரத்தாக, கடைசியாக ஆப்கானிஸ்தானை மட்டும் வென்றது. 5 போட்டியில் 3 புள்ளி பெற்ற இந்த அணி, அடுத்த 4 போட்டியிலும் வென்றால் தான் அரையிறுதி குறித்து யோசிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் நியூசிலாந்தை சந்திக்கிறது.

கடந்த 2015 உலக தொடரில் அரையிறுதியில் அடைந்த தோல்விக்கு, இன்று வென்று நியூசிலாந்தை பழி தீர்க்கும் என நம்பப்படுகிறது. இதற்கேற்ப குயின்டன் டி காக், ஆம்லா ஜோடி நல்ல துவக்கம் தர, கேப்டன் டுபிளசி, மார்க்ரம், பெலுக்வாயோ கைகொடுக்க வேண்டும்.

பவுலிங்கில் 40 வயது 'சீனியர்' இம்ரான் தாகிர் (8 விக்.,), ரபாடா உதவலாம். காயத்தில் இருந்து மீண்ட லுங்கிடி அணிக்கு திரும்பியது ஆறுதல் தான்.

நியூசிலாந்து அணி 4 போட்டியில் (3 வெற்றி, 1 மழை) தோற்காமல் வலம் வருகிறது. கப்டில், மன்ரோ, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் என 'டாப் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பான ரன் குவிப்பை தருகின்றனர். பவுலிங்கில் பவுல்ட் (7 விக்.,), மாட் ஹென்றி (9 விக்.,) கூட்டணி கைகொடுக்கிறது. இவர்களுடன் கிராண்ட்ஹோம், நீஷம் என 'ஆல் ரவுண்டர்களும்' இணைவதால் தென் ஆப்ரிக்காவுக்கு சிக்கல் காத்திருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement