Advertisement

ஒரே போட்டியில் அதிக சிக்சர் சாதனை

ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆனார் இங்கிலாந்தின் மார்கன். இவர் நேற்று 17 சிக்சர் அடித்தார். இவ்வரிசையில் 'டாப்-5' வீரர்கள் விவரம்:



வீரர்/அணி சிக்சர் எதிரணி ஆண்டு/இடம்

மார்கன்/இங்கிலாந்து 17 ஆப்கன் 2019/மான்செஸ்டர்

ரோகித்/இந்தியா 16 ஆஸி., 2013/பெங்களூரு

டிவிலியர்ஸ்/தெ.ஆப்., 16 விண்டீஸ் 2015/ஜோகனஸ்பர்க்

கெய்ல்/விண்டீஸ் 16 ஜிம்பாப்வே 2015/கான்பெரா

வாட்சன்/ஆஸி., 15 வங்கதேசம் 2011/தாகா

* உலக கோப்பை போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் மார்கன் (17 சிக்சர்) 'நம்பர்-1' ஆக உள்ளார். விண்டீசின் கெய்ல் (16, ஜிம்பாப்வே, 2015) 2வது இடத்தில் உள்ளார்.



25

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று இங்கிலாந்து 25 சிக்சர் அடித்தது. உலக கோப்பை மற்றும் ஒருநாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. 2015 உலக கோப்பையில் விண்டீஸ் அணி 19 சிக்சர் அடித்தது (எதிர்-ஜிம்பாப்வே) அடுத்து உள்ளது.

* ஒருநாள் அரங்கில் இதற்கு முன் விண்டீசிற்கு எதிராக, இங்கிலாந்து 24 சிக்சர் (2019ல்) அடித்தது இரண்டாவது இடம் பெற்றது.



33

உலக கோப்பை அரங்கில் அதிக சிக்சர் அடிக்கப்பட்ட போட்டியாக இங்கிலாந்து (25), ஆப்கானிஸ்தான் (8) ஆட்டம் அமைந்தது. நேற்று மொத்தம் 33 சிக்சர் அடிக்கப்பட்டன. இதற்கு முன் 2015 உலக கோப்பை தொடரில் விண்டீஸ் (16)-நியூசிலாந்து (15) போட்டியில் 31 சிக்சர் அடிக்கப்பட்டன.



148

உலக கோப்பை அரங்கில் இங்கிலாந்து அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் மார்கன் (148) 3வது இடம் பெற்றார். முதல் இரு இடத்தில் ஸ்டிராஸ் (158, இந்தியா, 2011), ஜேசன் ராய் (153, வங்கதேசம், 2019) உள்ளனர்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement