Advertisement

அப்போ 58 ரன்...இப்போ 322 ரன்! * வங்கதேசத்தின் இமாலய எழுச்சி

டான்டன்: கடந்த 2011 உலக கோப்பை தொடரில் சொந்தமண்ணில் விண்டீசிடம் 58 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, தற்போது 322 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது.

ஒருநாள் அரங்கில் 1986ல் கால்பதித்தது வங்கதேச அணி. 13 ஆண்டுக்குப் பின் உலக கோப்பை தொடரில் (1999) கால் பதித்தது. முதல் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி மிரட்டியது. 2007ல் இந்தியாவை வென்று அசத்தியது.

2011ல் சொந்த மண்ணில் விண்டீசிற்கு எதிராக 58 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. கடந்த முறை (2015ல்) இங்கிலாந்தை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தது. இம்முறை எப்படியும் ஒரு சில போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்டது.

எதிர்பார்த்தபடியே முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்றது. உலக கோப்பை அரங்கில் 9 ஆண்டுக்குப் பின் மீண்டும் விண்டீசை (321/8 ரன்) சந்தித்தது. சமீபத்திய முத்தரப்பு தொடரில் விண்டீசை 3 முறை வென்ற வங்கதேசம், நம்பிக்கையுடன் 'சேஸ்' செய்தது.

விண்டீஸ் வேகங்கள், 'பவுன்சர்', 'ஷார்ட் பிட்ச்' போட்டு மிரட்டப் போகின்றனர் என நம்பப்பட்டது. ஆனால் இதுபோல வீசப்பட்ட 112 பந்துகளில், வங்கதேச வீரர்கள் 177 ரன்கள் குவித்து மிரட்டினர். இதில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்தனர். கடைசியில் 51 பந்துகள் மீதம் உள்ள நிலையில் 322/3 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தது.

இதுகுறித்து சாகிப் அல் ஹசன் கூறியது:

வங்கதேச அணி புதிய 'லெவலில்' உள்ளது. சமீபத்தில் அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு தொடர் அனுபவம் அதிகம் உதவியது. இதில் அனைத்து போட்டிகளையும் 'சேஸ்' செய்து வென்றோம். இதனால் எந்த இடத்திலும் நெருக்கடி இல்லாமல் சாதிக்க முடிந்தது. 'ஷார்ட் பிட்ச்' பந்துகள் எங்கள் அணியின் பலவீனம் என்றாலும், இதில் இருந்து மீண்டதற்கு பயிற்சியாளர்களுக்குத் தான் நன்றி கூற வேண்டும். துணிச்சலான மனநிலையில் விளையாடியதும் வெற்றிக்கு காரணம் ஆனது.

இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement