Advertisement

விஜய் 'ஸ்பெஷல்'

மான்செஸ்டர்: ''உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியது மிகவும் ஸ்பெஷலானது,'' என விஜய் சங்கர் தெரிவித்தார்.

இந்திய அணியின் 'ஆல் ரவுண்டர்' விஜய் சங்கர் 28. தமிழகத்தை சேர்ந்த இவர் உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார். புவனேஷ்வர் குமார், தொடையின் பின்பகுதி காயம் காரணமாக வெளியேற, மீதமுள்ள 2 பந்துகளை வீச, கேப்டன் கோஹ்லி, விஜய் சங்கரை அழைத்தார். முதல் பந்தில் இமாமை அவுட்டாக்கி, இந்தியாவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார்.

உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் ஆன விஜய் சங்கர் கூறியது:

கிரிக்கெட்டின் அனைத்து பிரிவிலும் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறேன். ஏனெனில் தேசத்துக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது, எவ்வித சூழ்நிலைக்கும் ஏற்ப நன்கு செயல்பட தயாராக இருக்க வேண்டும்.

அணியில் யாராவது காயமடைந்து அந்த இடத்தில் களமிறங்குவது என்பது சற்று அபூர்வம் தான். கோடிக்கணக்காக மக்கள் பார்த்து ரசிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உலக கோப்பை அறிமுகம் என்பது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.

பேட்டிங்கில் நன்றாக செயல்படுவேன் எனத் தெரியும். ஆனால் பந்துவீச்சிலும் அணிக்கு உதவியது மகிழ்ச்சி. முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இது எனக்கு 'ஸ்பெஷலானது'.

இவ்வாறு விஜய் சங்கர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement