Advertisement

இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம் * வீரர்களுக்கு இரண்டு நாள் லீவு

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், டிரம்ஸ் இசைத்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்திய வீரர்களுக்கு அணி நிர்வாகம் இரண்டு நாள் லீவு விட்டுள்ளது.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் மோதல் மான்செஸ்டரில் நடந்தது. இதில் இந்திய அணி ரன் மழை பொழிந்தது. பாகிஸ்தான் பேட்டிங்கில் வான் மழை தொல்லை தர, கேப்டன் கோஹ்லியின் வீரர்கள் வெற்றி மழையில் நனைந்தனர்.

இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது என போர்க்கொடி துாக்கியவர்கள் தற்போது உற்சாகத்தில் திளைக்கின்றனர்.

மான்செஸ்டர் மைதானத்துக்கு வெளியில் காரில் ஸ்பீக்கருடன் வந்த ரசிகர், ரசிகைகள், மூவர்ணக் கொடியுடன் சாலையில் ஆடி தீர்த்தனர். டில்லி, சிலிகுரி மற்றும் இந்துரில் இருந்தவர்கள் வாணவேடிக்கை வெடித்து மகிழ்ந்தனர். மும்பை, மத்திய பிரதேசம் உள்ளிட்ட நாடுமுழுவதும் இருக்கும் ரசிகர்கள் இந்தியா உலக கோப்பை வென்று விட்டதாகவே நினைத்து மகிழ்ந்தனர்.

கோப்பை எங்களுக்கு...

போட்டிக்கு முன் அபிநந்தனை கேலி செய்யும் வகையில் விளம்பரம் வெளியிட்டது பாகிஸ்தான் மீடியா. தற்போது இந்தியா வென்றதை அடுத்து, 'கோப்பை எங்களுக்கு, டீ கப் உங்களுக்கு' என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.



விட்டாச்சு 'லீவு'

உலக கோப்பை தொடரில் இந்திய அணி, அடுத்து 22ம் தேதி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இடையில் 6 நாட்கள் உள்ளன. தவிர, பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர் இந்திய அணி வீரர்கள். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் இந்திய வீரர்களுக்கு இரண்டு நாள் லீவு (விடுப்பு) தரப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement