Advertisement

நார்வே செஸ்: ஆனந்த் ஏமாற்றம்

ஸ்டாவஞ்சர்: நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் ஆனந்த், உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். 9 சுற்றுக்கள் (தலா 2 போட்டி) கொண்ட இதன் 3, 4, 5 சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற்றார் ஆனந்த்.

ஆறாவது சுற்றில் ஆனந்த், சீனாவின் யு யாங்கியை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த அதிவேக போட்டியில் ஆனந்த் 48வது சுற்றில் தோல்வியடைந்தார். இதுவரை நடந்த 6 சுற்று முடிவில் ஆனந்த், 5.5 புள்ளியுடன் 6வது இடத்தில் உள்ளார். நார்வேயின் கார்ல்சன் (9.5) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement