Advertisement

'ஷாக்' கொடுத்த சர்மா

உலக கோப்பை அரங்கில் நட்சத்திர வீரர்கள் விளாசும் சிக்சர் போட்டியில் திருப்பு முனை ஏற்படுத்தும். கடந்த 2003ல் பாகிஸ்தான் 'வேகப்புயல்' அக்தர் பந்தில் இந்தியாவின் சச்சின் விளாசிய சிக்சரை மறக்க முடியாது. கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய 'லெவன்' அணியில், கடைசி நேரத்தில் தான் யஷ்பால் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அரையிறுதியில் முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணி 60 ஓவரில், 213 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கவாஸ்கர் (25), ஸ்ரீகாந்த் (19) ஏமாற்றம் அளித்தனர். இதற்கு பின், யஷ்பால் சர்மா கைகொடுத்தார். இவரை கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பாப் வில்லிஸ் அசத்தல் 'யார்க்கர்' வீசினார். இதனை கண்டு அஞ்சாத யஷ்பால் சர்மா, 'ஸ்கொயர் லெக்' திசையில் இமாலய சிக்சர் விளாசினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய 'ஷாக்' கொடுத்தார். இதிலிருந்து அந்த அணியால் கடைசி வரை மீள முடியவில்லை. இறுதியில் இந்தியா 54.5 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அடுத்து நடந்த பைனலில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, முதன்முறையாக உலக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது.

தெரியுமா

கடந்த 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் அனில் கும்ளே. 'சுழலில்' அசத்திய இவர், 7 போட்டிகளில், 15 விக்கெட் வீழ்த்தினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement