Advertisement

மேரி கோம், சரிதா தங்கம்

கவுகாத்தி: இந்திய ஓபன் குத்துச்சண்டையில் மேரி கோம், சரிதா தேவி, அமித் பங்கால் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில், 2வது இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் நடந்தது. இதில் பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் மேரி கோம், மிசோராமின் வான்லா டுவாட்டி மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் இத்தொடரில் தொடர்ந்து 2வது முறையாக (2018, 2019) தங்கம் வென்றார்.

பெண்களுக்கான 60 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா தேவி, சிம்ரன்ஜித் கவுர் மோதினர். இதில் அபாரமாக ஆடிய சரிதா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் அமித் பங்கால், 4-1 என்ற கணக்கில் சகவீரர் சச்சின் சிவாச்சை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். ஆண்களுக்கான 60 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் ஷிவா தபா, மணிஷ் கவுசிக் மோதினர். இதில் ஷிவா தபா 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Kannan - Chennai,இந்தியா


    மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement