Advertisement

ஹாக்கி: இந்திய பெண்கள் ஏமாற்றம்

ஜின்சியான்: மூன்றாவது ஹாக்கி போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, 0-4 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் வீழ்ந்தது.

தென் கொரியா சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஜின்சியானில் நடந்தது.

துவக்கத்தில் இருந்து ஏமாற்றிய இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தென் கொரியா சார்பில் ஜாங் ஹீசன் (29வது நிமிடம்), கிம் ஹுன்ஜி (41வது), காங் ஜினா (41வது), லீ யூரி (53வது) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். இருப்பினும் இந்திய அணி 2-1 என, தொடரை வென்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement