Advertisement

முயற்சி மட்டுமே வெற்றி தரும்: மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்

புதுடில்லி: ''நல்லதோ, கெட்டதோ நாம் ஒரு செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் மக்கள் விவாதித்து கொண்டே இருப்பர். பல ஆண்டாக அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோதும், இதைத்தான் பின்பற்றினேன்,'' என, இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

இந்தியாவின் 'சீனியர்' விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், 33. தமிழகத்தை சேர்ந்த இவருக்கும், இளம் கீப்பர் ரிஷாப் பன்ட்டிற்கும் இடையே உலக கோப்பை தொடரில் இடம்பிடிக்க போட்டி காணப்பட்டது. இருப்பினும், அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திற்கு இடம் கிடைத்தது.

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது: எனது குடும்பத்தினர், நண்பர்களின் ஆசிர்வாதம் இல்லாவிடில், மீண்டும் கிரிக்கெட் விளையாடி இருக்க முடியாது. நல்லதோ, கெட்டதோ நாம் ஒரு செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் மக்கள் விவாதித்து கொண்டே இருப்பர். பல ஆண்டாக வாய்ப்பு இல்லாமல் இருந்தபோதும், இதைத்தான் பின்பற்றினேன். தற்போதும், இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த ஒரு நாள் தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை எண்ணி சற்று அதிர்ச்சி அடைந்தேன். இருப்பினும், இது முடிவல்ல என நம்பினேன். கடந்த இரண்டு ஆண்டாக எனது சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, உலக கோப்பை தொடரில் இடம் கிடைத்துள்ளது.

பாண்ட்யாவுடன் நட்பு

உலக கோப்பையில் வாய்ப்பு தந்தது குறித்து என்ன நினைக்கின்றனர் என கவலை இல்லை. என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்துள்ளனர். இந்திய அணிக்காக உலக கோப்பையில் சிறப்பாக விளையாடுவேன். இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யாவுடன் நட்பு உள்ளது. இவர்கள் அணியில் இல்லாதபோது, சற்று வருத்தமுடன் இருப்பேன். இவர்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைவேன். உலக கோப்பையில் நான் இடம்பெற முக்கிய காரணம் நண்பராகவும், ஆலோசகராகவும் இருக்கும் அபிஷேக் நாயர் மட்டும்தான். இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

....................





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement