Advertisement

'என்னை பார்த்தாலே பயம்': கெய்ல் பெருமிதம்

லண்டன்: ''பவுலர்களுக்கு என்னைப் பார்த்தாலே பயம். இதை கேமரா முன் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்,'' என கெய்ல் தெரிவித்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு முறை சாம்பியன் (1975, 1979) ஆனது விண்டீஸ் அணி. இம்முறை தகுதிச்சுற்றில் பங்கேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் கெய்ல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வரவு, விண்டீஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விண்டீஸ் 'சீனியர்' வீரர் கெய்ல் கூறியது:

இளம் பவுலர்கள் எனது விக்கெட்டை வீழ்த்துவதில் தீவிரமாக இருப்பர். இதனால் வரும் உலக கோப்பை தொடர் முன்பு போல அவ்வளவு எளிதாக இருக்காது. துவக்க காலங்களில் வேகமாக ரன்கள் குவித்தேன். அவர்கள் பயந்தனர். தவிர 'யுனிவர்ஸ் பாஸ்' என்ன செய்வார் என நன்கு தெரியும். 'கிரிக்கெட் உலகின் மிக அபாயகரமான பேட்ஸ்மேன் நான் தான்,' என அவர்களது மனதில் வந்து செல்லும்.

இவர்களிடம் சென்று,'கெய்லை பார்த்தால் பயமா,' என கேட்டால் கேமரா முன்பு 'இல்லவே இல்லை' என்பர். தனியாக சென்று பேசினால், 'கெய்ல்... கெய்ல் தான்,' என்பர்.

இவ்வாறு கெய்ல் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement