Advertisement

இந்திய வீரர்களுக்கு 'ஜி.பி.எஸ்.,' சோதனை

புதுடில்லி: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் உடற்தகுதியை கண்காணிக்க 'ஜி.பி.எஸ்., டிராக்கர்ஸ்' பயன்படுத்தப்பட உள்ளது.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி வந்த பிறகு, வீரர்கள் உடற்தகுதியில் மிகுந்த கட்டுப்பாடு காட்டப்படுகிறது. 'யோ--யோ' தேர்வில் தேறினால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். தற்போது உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சரியான உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய 'ஜி.பி.எஸ்., டிராக்கர்ஸ்' முறை பயன்படுத்தப்பட உள்ளது.

கால்பந்து அரங்கில் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், ஆர்சனல், பார்சிலோனா வீரர்களுடன் இணைந்துள்ள இங்கிலாந்தின் ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி நிறுவனம், இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் படி இந்திய வீரர்கள் ஜெர்சிக்குள் அணிந்து கொள்வர்.

இதனுடன் இணைக்கப்பட்ட கருவி, வீரர்களின் ஓடும் வேகம், கடந்த துாரம், வேகப்பவுலர்களுக்கு இருதயத்துடிப்பு அளவு உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு, வீரர்களுக்கு ஏற்பட உள்ள காயத்தை தவிர்க்கலாம் என நம்பப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement