Advertisement

ஆமதாபாத்தில் கால்பந்து தொடர்

புதுடில்லி: கண்டங்களுக்கு இடையிலான இரண்டாவது கால்பந்து தொடர் ஆமதாபாத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், கடந்த ஆண்டு கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து தொடர் துவங்கப்பட்டது. அறிமுக தொடரில் இந்திய அணி பைனலில் கென்யாவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது. இதன் இரண்டாவது தொடர், வரும் ஜூலை 7 முதல் 18 வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, சிரியா, வடகொரியா, தஜிகிஸ்தான் என நான்கு அணிகள் களம் காண்கின்றன. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக பைனலுக்கு முன்னேறும். போட்டிகள் நடக்கும் இடம் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. நேற்று, குஜராத்தின் ஆமதாபாத்தில் போட்டிகள் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement