Advertisement

பாட்மின்டன்: சவுரப் சாம்பியன்

மெட்வோடே: சுலோவேனியா ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீரர் சவுரப் வர்மா கோப்பை கைப்பற்றினார்.

சுலோவேனியாவில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சவுரப் வர்மா, ஜப்பானின் மினோரை எதிர் கொண்டார். முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய சவுரப், அடுத்த செட்டை 21-12 என எளிதாக வசப்படுத்தினார். 36 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், சவுரப் வர்மா 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

பூஜா ஜோடி ஏமாற்றம்

பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பூஜா, சஞ்சனா ஜோடி, இங்கிலாந்தின் ஜென்னி, விக்டோரியா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 14-21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 20-22 என போராடி பறிகொடுத்தது. முடிவில், பூஜா, சஞ்சனா ஜோடி 14-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement