Advertisement

கோஹ்லிக்கு அக்னி பரீட்சை: உலக கோப்பை தொடரில்...

புதுடில்லி: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில், கேப்டனாக சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் கோஹ்லி உள்ளார்.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி முதல் ஜூலை 14 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இதற்கான இந்திய அணிக்கு கேப்டனாக கோஹ்லி உள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வென்று காட்டியவர் கோஹ்லி. தனிப்பட்ட முறையில் இவர் சிறந்த வீரர் என்பதில் மாற்றமில்லை. ஏழு வாரங்கள் நடக்கும் இத்தொடரில் கோஹ்லி, 12,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டலாம்.

ஏற்கனவே 41 சதங்கள் அடித்த இவர், கூடுதலாக சில சதங்கள் விளாசலாம். ஆனால் மிகப்பெரிய உலக கோப்பை தொடரில் கேப்டனாக ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நான்காவது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய வேண்டும். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களா அல்லது குல்தீப், சகால் என இரு 'சுழல்' தாக்குதலா என்பதை முடிவு செய்ய வேண்டும். இப்படி சிறந்த அணியை தேர்வு செய்வதில் கோஹ்லிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் நிலையில், துவக்கத்தில் ரோகித் சதங்கள் அடிக்கலாம். ஐ.சி.சி., தொடர் என்றாலே அசத்தும் ஷிகர் தவான் ரன் மழை பொழியலாம்.

எங்கு பிரச்னை

இதற்கு பின் தான் பிரச்னை வருகிறது. 'பேட்டிங்' வரிசையில் நான்காவது இடத்தில் யாரை தேர்வு செய்வது என்பது குழப்பமாக உள்ளது. தமிழக 'ஆல் ரவுண்டர்' விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல் மத்தியில் போட்டி காணப்படுகிறது. 2018 முத்தரப்பு தொடர் பைனலில் கோப்பை வெல்ல உதவினார் தினேஷ் கார்த்திக் (8 பந்து, 29 ரன்). மற்றபடி, இவரது 14 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வேறு பெரிய இன்னிங்ஸ் எதுவும் நினைவில் இல்லை.

கேதர் தேறுவாரா

அடுத்து தோனி, 6வது இடத்தில் கேதர் ஜாதவ் வருகிறார். சமீபத்திய பிரிமியர் தொடரில் இவரது பேட்டிங் சுமார் தான். பவுலிங்கும் செய்யவில்லை. 7வதாக வரும் ஹர்திக் பாண்ட்யா, இத்தொடரில் இந்திய அணிக்கு பல திருப்பு முனைகளை தருவார் என நம்பப்படுகிறது.

உதவுமா 'சுழல்'

பவுலிங்கில் குல்தீப் யாதவ், சகால் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. பிரிமியர் தொடரில் குல்தீப் 'பார்ம்' சரியில்லை என நீக்கப்பட்டார். அடுத்து வரும் பும்ரா, இந்திய அணிக்கு 'மேட்ச் வின்னராக' இருப்பது உறுதி. ஷமியுடன் இணைவது எதிரணிகளுக்கு தொல்லையாக இருக்கும்.

தோனி எப்படி

தோனியை பொறுத்தவரையில் இது கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும். பிரிமியர் தொடரில் கடைசிகட்ட ஓவர்களில் இளம் இந்திய பவுலர்களை சமாளித்து அதிக ரன்கள் சேர்த்தார். ரபாடா (தெ.ஆப்.,), கம்மின்ஸ் (ஆஸி.,), முகமது ஆமிர் (பாக்.,) உள்ளிட்டோர் இம்முறை தொல்லை தரலாம். 35 முதல் 50 ஓவர்கள் வரை தோனியின் பேட்டிங் 'ஸ்டிரைக் ரேட்' 70 ஆக உள்ளது ஏமாற்றம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement