Advertisement

'பறக்கிறார்' கேதர் ஜாதவ்

புதுடில்லி: தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டார் கேதர் ஜாதவ். உலக கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து 'பறக்க' உள்ளார்.

இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ், 34. அவ்வப்போது காயத்தால் அவதிப்படுவார். பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடினார். மே 5ல் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து கிளம்பிய இவர், மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கவில்லை. எலும்பு முறிவு எதுவும் இல்லை என்பதால் கேதர் தேறி விடுவார் என நம்பப்பட்டது

ஒருவேளை காயம் சரியாகவில்லை எனில், ரிஷாப் பன்ட் 'உலக' அணியில் இடம் பெறுவார் கூறப்பட்டது. இதனிடையே கடந்த 16ம் தேதி கேதர் ஜாதவுக்கு நடந்த உடற்தகுதி சோதனையில் தேறி விட்டதாக இந்திய அணியின் 'பிசியோதெரபிஸ்ட்' பர்கத் பாட்ரிக் அறிக்கை தந்துள்ளார்.

இதனால் வரும் 22ம் தேதி இங்கிலாந்து கிளம்பும் இந்திய அணியில் கேதர் ஜாதவும் செல்வது உறுதியானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement