Advertisement

தொடரை வென்றது இங்கிலாந்து * பாக்., 'ஹாட்ரிக்' தோல்வி

நாட்டிங்காம்: பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இங்கிலாந்து 2-0 என முன்னிலையில் இருந்தது. நான்காவது போட்டி நாட்டிங்காமில் நடந்தது.

மார்கன் தடை காரணமாக பட்லர் கேப்டன் பொறுப்பேற்றார். 'டாஸ்' வென்ற இவர் பீல்டிங் தேர்வு செய்தார்.

பாபர் ஆறுதல்

பாகிஸ்தான் அணிக்கு இமாம் அல் ஹக், பகர் ஜமான் ஜோடி துவக்கம் கொடுத்தது. இமாம் (6) ரன் எடுத்த போது, மார்க் உட் வீசிய பந்து இவரது இடது கையில் தாக்கியது. 143 கி.மீ., வேகத்தில் வந்து தாக்கியதால் வலியில் துடித்த இவர் 'ரிட்டயர்டு ஹர்ட்' ஆனார். பகர் ஜமான் 57 ரன் எடுத்தார். ஹபீஸ் 59 ரன் எடுக்க பாபர் ஆசம் 115 ரன் எடுத்து அவுட்டானார். சோயப் மாலிக் (41) 'ஹிட்' விக்கெட் ஆனார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 340/7 ரன்கள் குவித்தது. கேப்டன் சர்பராஸ் (21) அவுட்டாகாமல் இருந்தார்.

ராய் அபாரம்

கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு வின்ஸ் (43) சற்று உதவ, ஜேசன் ராய் 114 ரன்கள் குவித்து கைகொடுத்தார். ஜோ ரூட் 36 ரன் எடுக்க, பட்லர், மொயீன் அலி 'டக்' அவுட்டாகினர். பின் வரிசையில் டாம் கர்ரான் 31 ரன் எடுத்து உதவினார். இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 341/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்டோக்ஸ் (71), ரஷித் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து வென்றது.



முதல் அணி

இங்கிலாந்துக்கு எதிரான 2, 3 மற்றும் 4 வது போட்டிகளில் 361/7, 358/9, 340/7 ரன்கள் விளாசிய பாகிஸ்தான் அணி, ஒருநாள் அரங்கில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் 340 அல்லது அதற்கும் மேல் ரன் எடுத்த முதல் அணியானது. இப்போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அடுத்து உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement