Advertisement

முத்தரப்பு கோப்பை வென்றது வங்கதேசம்

டப்ளின்: முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் அசத்திய வங்கதேச அணி, 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, கோப்பை கைப்பற்றியது.

அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் விண்டீஸ், வங்கதேச அணிகள் மோதின. டப்ளினில் நடந்த இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய விண்டீஸ் அணி 24 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.

24 ஓவரில் 210 ரன் எடுத்தால் வெற்றி என மாற்றப்பட்ட இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது. 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி கோப்பை வென்றது. சவுமியா சர்கார் 66, மொசாதெக் 52 ரன் எடுத்து உதவினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement