Advertisement

சுமித் நாகல் வெற்றி

சமர்கன்ட்: உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.

உஸ்பெகிஸ்தானில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், பிரான்சின் சாடியோ மோதினர். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய சுமித், அடுத்த செட்டில் 1-6 என சரிந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் எழுச்சி பெற்ற இவர் 6-1 என தனதாக்கினார். ஒரு மணி நேரம் 47 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், சுமித் நாகல் 6-4, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அர்ஜூன் ஜோடி ஏமாற்றம்

இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் காடே, கஜகஸ்தானின் டேனிஷ் ஜோடி, போர்ச்சுகலின் ஆலிவெரா, பெலாரசின் ஆண்ட்ரய் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 4-6 என இழந்த அர்ஜூன் ஜோடி, அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அர்ஜூன் ஜோடி 6-10 என பறிகொடுத்தது. ஒரு மணி நேரம் 12 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், அர்ஜூன், டேனிஷ் ஜோடி 4-6, 6-3, 6-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement