Advertisement

இந்திய 'ஏ' அணியில் சகா

புதுடில்லி: விண்டீஸ் 'ஏ' அணிக்கு எதிரான, 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய 'ஏ' அணியில் விக்கெட் கீப்பர் சகா சேர்க்கப்பட்டார்.

வரும் ஜூலையில் விண்டீஸ் செல்லவுள்ள இந்திய 'ஏ' அணி 5 ஒரு நாள், 3 நான்கு நாள் கொண்ட போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 11ல் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான, இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாள் கொண்ட 3 போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பர் விரிதிமான் சகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்டில் தோள்பட்டை காயத்திற்காக 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட இவர், சுமார் ஒரு ஆண்டிற்குப் பின் அணியில் இடம்பிடித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றபடி, சுப்மன், ஹனுமா விஹாரி, சிராஜ் உள்ளிட்டோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ரிஷாப் வாய்ப்பு

ஒரு நாள் அணியை பொறுத்தவரை சகாவுக்குப்பதில் கீப்பர் பணியை ரிஷாப் பன்ட் மேற்கொள்வார். மணிஷ் பாண்டே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

ஒரு நாள் அணி: மணிஷ் பாண்டே (கேப்டன்), பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், சுப்மன், ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், ராகுல் சகார், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குர்னால் பாண்ட்யா, தீபக் சகார், நவ்தீப் சைனி, கலீல் அகமது, அவேஷ் கான்.

நான்கு நாள் கொண்ட முதலிரண்டு போட்டிக்கான அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பன்சால், ஈஸ்வரன், சுப்மன், விஹாரி, ஷிவம் துபே, சகா, பரத், கவுதம், நதீம், மயங்க் மார்க்கண்டே, சைனி, சிராஜ், ஷர்துல் தாகூர், அவேஷ் கான்.

மூன்றாவது போட்டிக்கான அணியில் பன்சால், ஈஸ்வரனுக்குப்பதில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இடம்பிடித்துள்ளனர்.





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement