Advertisement

மும்பை வீரர்கள் கொண்டாட்டம் * திறந்தவெளி பஸ் ஊர்வலம்

மும்பை: பிரிமியர் தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்ற மும்பை அணி வீரர்கள் திறந்த வெளி பஸ்சில் ஊர்வலமாக 6 கி.மீ., துாரம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தியாவில் பிரிமியர் தொடரின் 12வது சீசன் 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடந்தது. ஐதராபாத்தில் நடந்த பைனலில் சென்னை அணியை 1 ரன்னில் வீழ்த்திய மும்பை அணி, நான்காவது முறையாக கோப்பை கைப்பற்றியது.

வெற்றி உற்சாகத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி வீரர்கள் 13ம் தேதி மாலை மும்பை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பின் மும்பை அணி உரிமையாளர் நீட்டா அம்பானி இல்லம் அமைந்துள்ள அன்டில்லா சென்றனர்.

அங்கிருந்து தெற்கு மும்பை பகுதியில் மும்பை அணி வீரர்கள் தங்கியிருந்த டிரிடென்ட் ஓட்டல் வரை திறந்தவெளி பஸ்சில் ஊர்வலம் சென்றனர். ரசிகர்கள் இரு சக்கர வாகனத்தில் முன் செல்ல, இந்த ஊர்வலம் 6 கி.மீ., துாரம் சென்றது. சாலையில் இரு பக்கங்களிலும் மும்பை அணி ரசிகர்கள் திரண்டு, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அணி உரிமையாளர் நீட்டா அம்பானியும் பஸ்சில், வீரர்களுடன் சென்றார். யுவராஜ் சிங், ஹர்திக் பாண்ட்யா, மலிங்கா, ஜெயவர்தனா என பலரும் பிரிமியர் கோப்பை ஏந்தி மகிழ்ந்தனர். ரசிகர்கள் எழுப்பிய 'பும்ரா... பும்ரா' சப்தம் நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்தது

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement