Advertisement

சென்னை– தாகா பலப்பரீட்சை

தாகா: ஆசிய கிளப் கால்பந்து தொடரில் இன்று சென்னை, வங்கதேசத்தின் தாகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசிய கிளப் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 2018 ஐ.எஸ்.எல்., சாம்பியன் சென்னை, 'ஐ-லீக்' சாம்பியன் மினர்வா பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, மண்டலங்களுக்கு இடையிலான அரையிறுதி 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறலாம். முதல் சுற்று முடிவில் சென்னை அணி 3 போட்டியில் 2 வெற்றி, 1 'டிரா' செய்து 7 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று துவங்குகின்றன. சென்னை அணி, இன்று தனது நான்காவது போட்டியில் வங்கதேசத்தின் தாகா அபானி அணியை, அதன் சொந்தமண்ணில் சந்திக்கிறது. இதற்கு முன் இரு அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 1-0 என வெற்றி பெற்றிருந்தது. சென்னை அணிக்கு மெய்ல்சன், அனிருத் தபா உள்ளிட்ட வீரர்கள் கைகொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் மினர்வா பஞ்சாப், நேபாளத்தின் மனாங் அணியை அதன் சொந்தமண்ணில் எதிர்கொள்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement