Advertisement

சாதித்து காட்டிய பார்டர்

உலக கோப்பை கவுன்ட் டவுண்: இன்னும் 34 நாட்கள்

ஆஸ்திரேலிய அணியின் அசைக்க முடியாத கேப்டனாக விளங்கியவர் ஆலன் பார்டர் 63. கடந்த 1987ல் நடந்த உலக கோப்பை தொடர், இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நேரத்தில் பதட்டப்படாத ஆலன் பார்டர் அருமையான வியூகம் அமைத்தார். இதற்கேற்ப மெக்டர்மட் துல்லியமாக பந்துவீச, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று, முதல் முறையாக உலக கோப்பை வென்றது.

இதற்கு பின் 1992ல் நடந்த உலக கோப்பை தொடரில் பார்டரின் ஆஸ்திரேலிய அணி பெரிதாக சாதிக்கவில்லை. இவர், 25 உலக கோப்பை போட்டிகளில் 452 ரன் எடுத்தார். இதில் 16 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 11ல் வெற்றி தேடித் தந்தார். இவர் 273 ஒரு நாள் போட்டிகளில் 6,524 ரன், 73 விக்கெட் எடுத்தார். டெஸ்ட் அரங்கில் ரன் மழை பொழிந்த இவர், எண்ணற்ற சாதனைகளை படைத்தார். 156 டெஸ்டில் 11,174 ரன்கள், 156 'கேட்ச்', 39 விக்கெட் வீழ்த்தினார். கடந்த 1982ல் 'விஸ்டன்' சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட இவர், 1994ல் ஓய்வு பெற்றார். கடந்த 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த வீரர்களுக்கான 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம் பிடித்தார்.



சக்லைன் சாதனை

உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து மூன்று விக்கெட் வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் சுழற்பந்துவீச்சாளர் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக். இவர் 1999ல் லண்டன், ஓவலில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஹென்ரி ஒலங்கா, ஆடம் ஹக்கில், மபாங்வா ஆகியோரை வெளியேற்றி, இச்சாதனையை நிகழ்த்தினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement