Advertisement

காலிறுதியில் திவிஜ் ஜோடி

புடாபெஸ்ட்: ஹங்கேரி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் திவிஜ் சரண், பிரேசிலின் மார்செலோ ஜோடி முன்னேறியது.

புடாபெஸ்டில் ஆண்களுக்கான ஹங்கேரி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், பிரேசிலின் மார்செலோ ஜோடி, சுவீடனின் ராபர்ட், பாகிஸ்தானின் குரேஷி ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றிய திவிஜ் ஜோடி, இரண்டாவது செட்டில் 4-6 என சறுக்கியது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் போராடிய இவர்கள் 11-9 என வசப்படுத்தினர். ஒரு மணி நேரம் 35 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் திவிஜ், மார்செலோ ஜோடி 6-3, 4-6, 11-9 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement