Advertisement

ஸ்டோசரை வென்றார் அன்கிதா

அன்னிங்: சீனாவில் நடக்கும் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தினார்.

சீனாவின் அன்னிங் பகுதியில் பெண்களுக்கான சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 178வது இடத்திலுள்ள இந்தியாவின் அன்கிதா, முன்னாள் யு.எஸ்., ஓபன் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஸ்டோசரை (77) சந்தித்தார். முதல் செட்டை 7-5 என அன்கிதா கைப்பற்றினார். அடுத்த செட்டை ஸ்டோசர் 6-2 என வென்று பதிலடி தந்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய அன்கிதா 7-5 என தனதாக்கினார். இரண்டு மணி நேரம் 49 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், அன்கிதா 7-2, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement