Advertisement

மனு, ஹீனா ஏமாற்றம்

பீஜிங்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியாவின் மனு பாகர், ஹீனா சித்து இழந்தனர்.

சீனா தலைநகர் பீஜிங்கில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதன் பெண்கள் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாகர், ஹீனா சித்து பங்கேற்றனர். இதில் ஏமாற்றிய மனு பாகர் 575 புள்ளிகள் மட்டும் பெற்று 17வது இடம் பிடித்தார். சக வீராங்கனை ஹீனா, 572 புள்ளியுடன் 26வது இடம் பிடித்தார். முதல் 8 இடம் பிடித்த வீராங்கனைகள் மட்டும் பைனலுக்கு முன்னேறியதால், இந்தியாவின் இரண்டு நட்சத்திரங்களும் வெளியேறினர்.

ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள் 3 பொசிஷன்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் செயின் சிங் (1165 புள்ளி) 27வது இடம் பிடித்தார். சக வீரர் பாருல் குமார் (1164) 33வது இடம் பிடித்தார். சஞ்சீவ் ராஜ்புட் (1145) 58வது இடமே பிடித்தார். மூன்று வீரர்களும் பைனல் வாய்ப்பை இழந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement