Advertisement

கடைசி கட்ட ஓவரில் கவனம்: ஸ்ரேயாஸ் எச்சரிக்கை

புதுடில்லி: ''கடைசி கட்ட ஓவர்களை துல்லியமாக வீசினால் ரன் வழங்குவதை தவிர்க்கலாம்'' என, டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் மும்பை அணி (168/5, 20 ஓவர்) 40 ரன் வித்தியாசத்தில் டில்லி அணியை (128/9, 20 ஓவர்) வென்றது. இப்போட்டியில் மும்பை அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்திருந்தது. கடைசி மூன்று ஓவரில் 50 ரன் கிடைக்க, 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டில்லி அணி, சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3ல் தோல்வியடைந்தது.

இதுகுறித்து டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது: பிரிமியர் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டால் 'பிளே-ஆப்' சுற்றுக்கு சுலபமாக முன்னேறலாம். ஆனால், இதுவரை 3ல் தோல்வியை சந்தித்திருப்பது ஏமாற்றம். 'டாஸ்' வென்றது பின்னடைவாக அமைந்தது. மும்பை அணியினர் 'பேட்டிங்', 'பீல்டிங்', 'பவுலிங்' என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டனர்.

டில்லி அணி பவுலர்கள் கடைசி கட்ட ஓவர்களை துல்லியமாக வீசுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் அதிகளவில் ரன் வழங்குவதை தவிர்க்கலாம். கடைசி மூன்று ஓவர்களில் அதிக ரன் வழங்கியது வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு ஸ்ரேயாஸ் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement