Advertisement

இலங்கை 'உலக' அணிக்கு புதிய கேப்டன்

கொழும்பு: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார் கருணாரத்னே.

இலங்கை ஒருநாள், 'டுவென்டி-20' அணியின் கேப்டனாக. வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இருந்தார். தற்போது உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு புதிய கேப்டனாக திமுத் கருணாரத்னே தேர்வு செய்யப்பட்டுள்ளார். துவக்க வீரரான இவர் 17 ஒருநாள் போட்டிகளில் (190 ரன்) மட்டுமே பங்கேற்றார்.

கடந்த ஆண்டின் ஐ.சி.சி., டெஸ்ட் கனவு அணியில் இடம் பெற்றார். இந்த ஆண்டு துவக்கத்தில் கருணாரத்னே தலைமையிலான டெஸ்ட் அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது.

சமீபத்தில் இலங்கையில் குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில், இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, லைசன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் மாத்யூஸ், சண்டிமால், மலிங்கா வரிசையில் இலங்கை அணிக்கு நான்காவது கேப்டனாக குணரத்னே தேர்வாகினர். உலக கோப்பை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement