Advertisement

'லக்கி' தினேஷ் கார்த்திக் * உற்சாத்தில் விஜய் சங்கர்

இந்திய அணியில் தோனிக்கு மாற்றாக இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்பது பெரும் குழப்பமாக இருந்தது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 33 (91 ஒருநாள்), கடந்த 2004, செப். 5ல் தோனிக்கு முன் (2004, டிச. 23) அறிமுகம் ஆனார். தோனி 2007, 2011, 2015 என மூன்று உலக கோப்பை தொடரில் பங்கேற்று விட்டார்.

தினேஷ் கார்த்திக் 2007ல் இடம் பெற்ற போதும் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. 2011, 2015ல் இடம் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பின் வரிசையில் களமிறங்கி போட்டிகளை சிறப்பாக 'பினிஷிங்' செய்து தந்தார். சமீபத்திய போட்டிகளில் எழுச்சி பெற்ற இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 21 (5 ஒருநாள்), கடும் சவால் கொடுத்தார். இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, ரிஷாப் பன்டுக்கு வாய்ப்பு தரப்பட்டது.

தற்போதை பிரிமியர் தொடரில் தினேஷ் கார்த்திக்கை (111 ரன்) விட ரிஷாப் பன்ட் (245) அதிக ரன் எடுத்தார். இருப்பினும் இது உலக கோப்பை தொடருக்கான தேர்வில் கணக்கில் கொள்ளப்படாது என கேப்டன் கோஹ்லி முன்னதாகவே தெரிவித்தார்.

கடைசியில் கோஹ்லி சொன்னது நடந்தது. இளமையை விட அனுபவம் முக்கியம் என முடிவு செய்துள்ளனர். தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறுகையில்,'' ஒருவேளை முக்கிய போட்டியில் தோனி காயம் காரணமாக பங்கேற்காமல் போனால், அனுபவம் தான் கைகொடுக்கும் என்ற அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம்,'' என்றார்.



இருவர்

கடந்த 2015 உலக கோப்பை தொடரில் தமிழகத்தின் சார்பில் அஷ்வின் மட்டும் இடம் பெற்றிருந்தார். இம்முறை தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் என இருவர் இடம் பெற்றுள்ளனர்.



கனவு நனவானது

விஜய் சங்கர் கூறுகையில்,'' உலக கோப்பை அணியில் தேர்வானதால் மிக உற்சாகமாக உள்ளேன். எனது கனவு நனவானது போல உள்ளது. ஐதராபாத் அணியில் உள்ள உலக கோப்பை கோப்பை வென்ற ஒருசில வீரர்களுடன் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். இது போன்ற பெரிய தொடர்களில் நெருக்கடியான நேரங்களில் எப்படி செயல்படுவது என இவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன்,'' என்றார்.



எனக்கு பொருத்தம்

வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறுகையில்,'' உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இங்குள்ள சூழ்நிலை எனக்கு மிக பொருத்தமாக இருக்கும். இதில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,'' என்றார்.



கவாஸ்கர் வியப்பு

முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,'' பிரிமியர் மட்டுமல்ல, இதற்கு முன்பும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார் ரிஷாப் பன்ட். விக்கெட் கீப்பிங் பணியிலும் நல்ல முன்னேற்றம் அடைந்தார். இடது கை பேட்ஸ்மேனான இவரை சேர்த்திருந்தால், பவுலிங் செய்யும் போது எதிரணி பவுலர்களுக்கு தொல்லையாக இருந்திருக்கும். ரிஷாப் பன்ட் உலக கோப்பை அணியில் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement