Advertisement

ஆஸி.,க்கு முதல் கோப்பை

உலக கோப்பை கவுன் டவுண்: இன்னும் 45 நாட்கள்

நான்காவது உலக கோப்பை தொடர் 1987ல் இந்தியா, பாகிஸ்தானில் நடந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. ஓவர்களின் எண்ணிக்கை 60ல் இருந்து 50 ஆக குறைக்கப்பட்டன. இத்தொடரில் 'திரில்' வெற்றிகளுக்கு பஞ்சமில்லை. சென்னையில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மும்பையில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சந்தித்தது. மனிந்தர் சிங் உள்ளிட்ட இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை தனது 'ஸ்வீப் ஷாட்' மூலம் சிதறடித்த கிரகாம் கூச் (115 ரன்) சதம் கடந்தார். மறுமுனையில் மைக் கேட்டிங் (56) அரைசதமடிக்க இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அசார் (64) கைகொடுக்க, ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. பின், கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 15 ரன்னுக்கு இழந்தது. இந்திய அணி 45.3 ஓவரில் 219 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. இதனையடுத்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் பூன் (75), கைகொடுக்க 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கிரகாம் கூச் (35), பில் (58), கேட்டிங் (41), லாம்ப் (45) ஆகியோரது போராட்டம் வீணானது. இங்கிலாந்து அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 246 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பதட்டப்படாமல் ஆடிய ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று, முதன்முறையாக உலக கோப்பை வென்றது.



தெரியுமா

நாக்பூரில், 1987ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் 88 பந்தில் 103 ரன்கள் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய கவாஸ்கர், இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இது தான், ஒருநாள் போட்டிகளில் இவர் அடித்த ஒரே சதம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement