Advertisement

விராத் கோஹ்லிக்கு அபராதம்

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசிய பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொகாலியில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் கிறிஸ் கெய்ல் 99 ரன் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி 67, டிவிலியர்ஸ் 59 ரன் எடுத்து கைகொடுக்க, 19.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது, இந்த சீசனில் பெங்களூருவுக்கு கிடைத்த முதல் வெற்றி.

இப்போட்டியில் பெங்களூரு அணி தாமதமாக பந்துவீசியது. இதனையடுத்து கேப்டன் விராத் கோஹ்லிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல மும்பையில் நடந்த மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இப்போட்டியில் இரு அணிகளும் தாமதமாக பந்துவீசின. இதனால் இரு அணி கேப்டன்களான அஜின்கியா ரகானே (ராஜஸ்தான்), ரோகித் சர்மா (மும்பை) ஆகியோருக்கு தலா 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement