Advertisement

கோவா அணி சாம்பியன்

புவனேஸ்வர்: இந்தியன் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் கோவா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை எப்.சி., அணியை வென்றது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 2வது இந்தியன் சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் கோவா, சென்னை எப்.சி., அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கோவா அணிக்கு 51வது நிமிடத்தில் கோரோ முதல் கோலடித்தார். இதற்கு, 54வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபேல் அகஸ்டோ ஒரு கோலடித்து பதிலடி தந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கோவா அணிக்கு 64வது நிமிடத்தில் பிரண்டன் பெர்ணான்டஸ் ஒரு கோலடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய சென்னை அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சீசனில் பெங்களூரு அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தது. இம்முறை அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கோவா அணியின் கோரோ (5 கோல்) முதலிடம் பிடித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement