Advertisement

வருகிறார் மலிங்கா

புதுடில்லி: இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, பிரிமியர் தொடரில் மும்பை அணிக்காக அடுத்த இரண்டு போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா சென்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரை முழுமையாக இழந்தது. இத்தொடருக்கான இலங்கை அணி கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா செயல்பட்டார். இதனால் இவர், சமீபத்தில் மும்பையில் நடந்த பிரிமியர் தொடருக்கான லீக் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடவில்லை.

இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு தேர்வாக வேண்டுமானால் வரும் ஏப்., 4-11ல் நடக்கவுள்ள உள்ளூர் போட்டியில் பங்கேற்க வேண்டும் என, இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) அந்நாட்டு வீரர்களுக்கு தெரிவித்திருந்தது. இதனால் மலிங்கா, பிரிமியர் தொடரின் முதல் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), எஸ்.எல்.சி.,யிடம் மலிங்காவை பிரிமியர் தொடரில் விளையாட அனுமதிக்க கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு எஸ்.எல்.சி., சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மும்பை அணி, அடுத்து பங்கேற்கவுள்ள 2 போட்டிகளில் மலிங்கா விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எஸ்.எல்.சி., தேர்வுக்குழு தலைவர் அஷாந்தா டி மெல் கூறுகையில், ''பிரிமியர் தொடரில் விளையாட மலிங்காவுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே இவருக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த பவுலரான இவருக்கு உலக கோப்பை அணியில் நிச்சயம் இடம் உண்டு,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement