Advertisement

துப்பாக்கி சுடுதல்: இந்தியா ஏமாற்றம்

அகாபல்கோ: உலக கோப்பை 'ஷாட்கன்' துப்பாக்கி சுடுதல் 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராஷ்மி ரத்தோர், மகேஷ்வரி சவுகான், சிம்ரன்பிரீத் கவுர் ஏமாற்றினர்.

மெக்சிகோவில், உலக கோப்பை 'ஷாட்கன்' துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ராஷ்மி ரத்தோர், மகேஷ்வரி சவுகான், சிம்ரன்பிரீத் கவுர் பங்கேற்றனர். இதில் ராஷ்மி ரத்தோர், 112 புள்ளிகளுடன் 23வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான மகேஷ்வரி சவுகான் (109 புள்ளி), சிம்ரன்பிரீத் கவுர் (97) முறையே 33, 48வது இடங்களை கைப்பற்றினர். இதனையடுத்து இவர்கள் மூவரும் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

பைனலில் அசத்திய அமெரிக்காவின் கிம்பர்லி ரோட், 57 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அடுத்த இரண்டு இடங்களை நியூசிலாந்தின் டிப்பிள் (48), சீனாவின் டாங்லியான் ஜாங் (42) ஆகியோர் கைப்பற்றினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement