Advertisement

காலிறுதியில் போபண்ணா ஜோடி

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி முன்னேறியது.

அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி, ஸ்பெயினின் மார்சல் கிரானோலர்ஸ், குரோஷியாவின் நிகோலா மெக்டிச் ஜோடியை எதிர்கொண்டது.

அபாரமாக ஆடிய போபண்ணா ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement