Advertisement

தென் ஆப்ரிக்கா வெற்றி

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதிய 3வது 'டுவென்டி-20' போட்டி ஜோகனஸ்பர்க் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா 'பீல்டிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ராம் (15) சுமாரான துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய ரீஜா ஹென்டிரிக்ஸ் (66), பிரிடோரியஸ் (77*) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். கேப்டன் டுமினி (34*) தன்பங்கிற்கு ரன் சேர்த்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தனஞ்செயா டி சில்வா (8) ஏமாற்றினார். நிரோஷன் டிக்வெல்லா (38) ஆறுதல் தந்தார். இலங்கை அணி, 11.1 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.

மழை நின்ற பின், 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 17 ஓவரில் 183 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இசுரு உதானா (36) ஓரளவு கைகொடுத்தார். இலங்கை அணி 15.4 ஓவரில், 137 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. இதனையடுத்து 'டுவென்டி-20' தொடரை தென் ஆப்ரிக்க அணி 3-0 என, முழுமையாக கைப்பற்றியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement