Advertisement

டில்லி 'கில்லி' ரிஷாப் பன்ட்: மும்பை அணி தோல்வி

மும்பை: மும்பை அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் ரிஷாப் அரை சதம் விளாச டில்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், பிரிமியர் தொடரின் 12வது சீசன் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை, டில்லி அணி மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.

டில்லி அணிக்கு பிரித்வி ஷா சொதப்பினார். இவர் மெக்லீனகன் வீசிய இரண்டாவது ஓவரில் 7 ரன்களில் திரும்பினார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார். மீண்டும் வந்த மெக்லீனகன் இம்முறை, கேப்டன் ஸ்ரேயாசை (16) வெளியேற்ற, டில்லி அணி தள்ளாடியது.

இங்க்ராம் கலக்கல்

ஷிகர் தவான், இங்க்ராம் ஜோடி வேகமாக ரன் சேர்த்தது. விக்கெட் சரிவிலிருந்து அணியை காப்பாற்றிய இவர்களின் நுணுக்கமான ஆட்டம் 'ஸ்கோர்' உயர கைகொடுத்தது. ஹர்திக் பாண்ட்யாவின் எட்டாவது ஓவரில் இங்க்ராம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மெக்லீனகனின் 10வது ஓவரில் தவான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.

ரிஷாப் அரை சதம்

பென் கட்டிங் 'வேகத்தில்' இங்க்ராம் (47) அரை சத வாய்ப்பை இழந்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யாவின் 16வது ஓவரின் முதல் பந்தில் தவான் (43) ஆட்டமிழந்தார். இதே ஓவரில் ரிஷாப் வெளுத்து வாங்கினார். தொடர்ந்து 6, 4, 6 என விளாசி டில்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கீமோ பால் (3), அக்சர் படேல் (4) ஒற்றை இலக்கில் திரும்பினர். பும்ரா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரிஷாப் அரை சதம் கடந்தார். டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது. ரிஷாப் (78), திவேதியா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

யுவராஜ் அரை சதம்

கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு இஷாந்த் சர்மா தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' கேப்டன் ரோகித் சர்மா (14) ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த இஷாந்த் 6வது ஓவரில் 'இரட்டை அடி' கொடுத்தார். முதல் பந்தில் சூர்யகுமார் (2) ரன் அவுட்டானார். 5வது பந்தில் குயின்டன் (27) அவுட்டானார். போலார்டு, யுவராஜ் சிங் ஜோடி சிறப்பாக விளையாடியது. அக்சர் படேல் வீசிய 10வது ஓவரில் வெளுத்து வாங்கிய யுவராஜ் சிங் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார்.

கீமோ பால் பந்தில் போலார்டு (21) ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ஐந்து பவுண்டரி அடித்த குர்னால் பாண்ட்யா 32 ரன்களில் அவுட்டானார். ரபாடா 'வேகத்தில்' பென் கட்டிங் (3) ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய யுவராஜ் சிங் (53) அரை சதம் கடந்தார். மற்றவர்கள் ஏமாற்ற, மும்பை அணி 20 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. டில்லி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த், ரபாடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

2

இப்போட்டியில் மும்பை சார்பில் வேகப்பந்துவீச்சாளர் ரஷிக் சலாம் அறிமுகமானார். இதன் மூலம், பிரிமியர் தொடரில் அறிமுகமான இரண்டாவது காஷ்மீர் வீரரானார். இதற்கு முன், 'சுழல்' வீரர் பர்வேஸ் ரசல் புனே, ஐதராபாத் அணிக்காக அறிமுக வாய்ப்பு பெற்றிருந்தார்.

பும்ரா காயம்

போட்டியின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். இதில் ரிஷாப் அடித்த பந்தை தடுக்க முற்பட்டபோது, பும்ராவின் இடது தோள்பட்டை பகுதியில் வலி ஏற்பட்டது. மைதானத்தில் வலியால் துடித்தார்.

..............





























Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement