Advertisement

பாகிஸ்தானில் தடை

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரை ஒளிபரப்பு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் பாகிஸ்தான் மீது இந்திய மக்கள் கோபம் அடைந்தனர். இதனால், பாகிஸ்தான் சூப்பர் லீக் 'டுவென்டி-20' தொடரை இந்தியாவில் ஔிபரப்பிய 'டி ஸ்போர்ட்' சேனல் தனது சேவையை நிறுத்தியது. இந்நிலையில், ஐ.பி.எல்., தொடரை ஔிபரப்ப பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில்,'' பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை இந்தியாவில் ஒளிபரப்பு தடை விதிக்கப்பட்டது. நாங்கள் எப்போதும் அரசியல், விளையாட்டை பிரித்துதான் பார்த்தோம். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் தோள்பகுதியில் கறுப்பு நிற பட்டை அணிந்து விளையாடினர். இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட செயல்பாட்டை எங்களால் பொறுக்க முடியாது. ஐ.பி.எல்., தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பு தடை விதிக்கப்படுகிறது,,' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement