Advertisement

ஸ்மித், வார்னர் எதிர்பார்ப்பு

தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சுரண்டிய விஷயத்தில் தடையை சந்தித்தவர்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்மித், வார்னர். கடந்த சீசனில் தடை காரணமாக களமிறங்கவில்லை. தற்போது மீண்டும் அணிக்கு திரும்பினர். உலக கோப்பைக்கு முன் இவர்களது பேட்டிங் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வருகிறார் வருண்

ஐ.பி.எல்., ஏலத்தில் 'ஜாக்பாட்' அடித்தவர் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி, 27. , வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டரான' இவர், முழங்கால் காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளராக மாறினார். டி.என்.பி.எல்., தொடரில் மதுரை அணிக்காக களமிறங்கிய வருண், திண்டுக்கல் அணிக்கு எதிரான பைனலில் 4 ஓவரில் 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார்.

விஜய் ஹசாரே தொடரில் 2018ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் (22 விக்.,) இரண்டாவது சிறந்த பவுலர் இவர் தான். எக்கானமி ரேட் 4.7 ஆக உள்ளது. 'ஆப் பிரேக்', 'லெக் பிரேக்' , 'கூக்ளி', 'கேரம் பால்', பிளிப்பர், 'டாப் ஸ்பின்னர்', 'ஸ்லைடர்' என ஏழு விதமான முறையில் பந்தை சுழற்றுவது வருணின் பலம்

இதனால் தான் ஏலத்தில் உச்சம் தொட்டார். ஒரு முதல்தரம், 9 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் மட்டும் பங்கேற்ற இவரது அடிப்படை தொகை ரூ. 20 லட்சமாக இருந்தது. கடைசியில் 42 மடங்கு அதிகமாக ரூ. 8.4 கோடி கொடுத்து பஞ்சாப் தட்டிச் சென்றது. இந்த சீசனில் கேப்டன் அஷ்வினுடன் இணைந்து பஞ்சாப் அணிக்காக ஜொலிப்பார் என நம்பப்படுகிறது.

முதன் முறை

கடந்த 2008ல் முதல் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. 2009ல் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்தது. பாதுகாப்பு காரணங்களுக்கான 2வது தொடர் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்டது. கடந்த 2014 தேர்தலின் போது, முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தன.

தேர்தலுக்குப் பின் மீண்டும் போட்டிகள் இந்தியாவுக்கு திரும்பின. முதன் முறையாக 2019ல் பொதுத்தேர்தலின் போது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது.

தோல்வி இல்லை

பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய 23 போட்டிகளில் 15ல் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 7ல் மட்டும் தோற்றது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. கடைசி 6 போட்டிகள் உட்பட கடந்த 2014 முதல் இந்த அணிக்கு எதிராக மோதிய அனைத்து போட்டி சென்னை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement