Advertisement

உலக செஸ்: இந்தியா 'நான்கு'

அஸ்டானா: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆண்கள் அணி நான்காவது இடம் பெற்று ஏமாற்றியது. பெண்கள் அணி 6வது இடம் பிடித்தது.

கஜகஸ்தானில் அணிகளுக்கு இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் ஆண்களுக்கான 9வது மற்றும் கடைசி சுற்றில் இந்தியா, ரஷ்யா அணிகள் மோதின. இந்தியாவின் அதிபன், அரவிந்த் சிதம்பரம், சூர்ய சேகர் கங்குலி மோதிய போட்டிகள் 'டிரா' ஆகின. சேதுராமன் தனது போட்டியில் தோல்வியடைந்தார்.

ஒன்பது சுற்றுகளின் முடிவில் இந்தியா, 22 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்தது. ரஷ்யா (23.5) முதலிடத்தை தட்டிச் சென்றது.

இந்திய பெண்கள் 'டிரா'

பெண்களுக்கான 9வது மற்றும் கடைசி சுற்றில் இந்தியா, ஹங்கேரி அணிகள் மோதின. இந்தியாவின் பக்தி குல்கர்னி தனது போட்டியில் வெற்றி பெற, சவுமியா தோல்வியடைந்தார். ஈஷா, பத்மினி ராத் தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். முடிவில் இந்திய அணி 2.0-2.0 என்ற கணக்கில் 'டிரா' செய்தது.

முடிவில் இந்திய பெண்கள் அணி 20 புள்ளிகள் பெற்று 6வது இடம் பிடித்தது. சீன அணி 26.5 புள்ளிளுடன் முதலிடம் பெற்று அசத்தியது. ரஷ்யா (26), ஜார்ஜியா (23) 2, 3வது இடம் பிடித்தன.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement